சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு ஒரு வருட சேவை நீடிப்பு வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
38 வருட சேவைக் காலத்தை நிறைவு செய்த அஜித் ரோஹண கடந்த 08ஆம் திகதி ஓய்வு பெற்றார். எனினும், அன்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் அவருக்கு பின்திகதியிட்டு ஒரு வருட சேவை நீடிப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பொலிஸ் திணைக்களத்தை மறுசீரமைக்கும் பணிகள் அவரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
