சஜித் – ரணில் ஒரே மேடையில் இணைவு

0
53

மகாமானிய டி.எஸ். சேனாநாயக்க அரசியல் பீடத்தின் பழைய மாணவர் சங்கமான DSSPA Alumni Club ஏற்பாடு செய்யும் “ஜே.ஆர். ஆட்சிமுறை மற்றும் நடுநிலைப் பாதை” என்ற அறிஞர் கலந்துரையாடல் நாளை (17) பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு 07, தேசிய நூலக மற்றும் ஆவணக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here