சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்ற ஷிராந்த!

0
61

ஷிராந்தி ராஜபக்ச, இன்று (16) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான SQ-469 என்ற விமானம் மூலம் அதிகாலை 1.10 மணியளவில் நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

ரோஹித ராஜபக்சவின் மாமியார் ஆனி டி லிவேராவும் இந்தப் பயணத்தில் அவருடன் சென்றுள்ளார்.

சிங்கப்பூர் எலிசபத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற ஷிராந்தி ராஜபக்ச சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஷிராந்தி ராஜபக்ச செப்டம்பர் 24 ஆம் திகதி நிதிப் குற்றப் புலனாய்வுக் கோட்டத்தின் (FCID) முன் ஆஜராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here