அரசாங்கத்திற்கு எதிராக நாளை நாடளாவிய ரீதியிலான பாரிய தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி நாடளாவிய ரீதியில் நாளைய தினம் ஹர்த்தால் மற்றும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு அமைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலகாத நிலையில், எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாளைய தினம் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால், மற்றும் போராட்டங்கள் பணிபுறக்கணிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அன்றைய தினம் அனைத்து வீடுகள் மற்றும் கட்டிடங்களில் கறுப்புக்கொடிகளை ஏற்றுமாறும் ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே இன்று நள்ளிரவு முதல் 24 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது