நான் வெளிநாட்டில், எனது வீட்டில் அரசியல் சந்திப்புகள் எதுவும் நடக்கவில்லை

Date:

பிரதி சபாநாயகர் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் பலமான ஒருவருக்கும் எதிர்க்கட்சித் தலைவரின் தாயாருக்கும் இடையில் அவரது இல்லத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என தொழிலதிபர் திருகுமார் நடேசன் தெரிவித்துள்ளார்.

“ஹேமா பிரேமதாச நான் மதிக்கும் ஒரு பெண். கடந்த 10 வருடங்களாக நான் அவரை சந்திக்கவில்லை. மேலும், ஒரு வாரத்திற்கு மேலாக நான் இலங்கையில் இருக்கவில்லை. தொழில் விஷயமாக வெளியூர் சென்றுள்ளேணன். மேலும், நீங்கள் கூறுவது போல் ஹேமா பிரேமதாச அவர்களோ அல்லது அரசாங்கத்தின் பலமானவர்களோ அல்லது எவரேனும் இந்த நாட்களில் எனது வீட்டிற்கு வரவில்லை. எனது வீட்டில் அவ்வாறான அரசியல் கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை. அந்தக் கதை முழுப் பொய். அரசியல்வாதிகள் என்ன செய்தாலும், வயது முதிர்ந்த பெண்ணாக இருந்தாலும், முன்னாள் முதல் பெண்மணி, இதுபோன்ற பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபடுவது அசிங்கமானது. அதை செய்ய வேண்டாம். முடிந்தால் என் வீட்டில் அப்படி ஒரு விவாதம் நடந்ததை நிரூபித்துக் காட்டலாம். மேலும், நான் அரசியல் செய்யவில்லை. என்னை அரசியலில் ஈடுபடுத்த வேண்டாம்” என லங்கா நியூஸ் வெப் இணையத்தளத்திற்கு திருகுமார் நடேசன் தெரிவித்தார்.

பிரதி சபாநாயகர் தேர்தல் தொடர்பில் திரு நடேசனின் தலையீட்டில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரது தரப்பினர் குற்றம் சுமத்தியிருந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சஷீந்திர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில்...

கொழும்பில் இரண்டு துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (05) இரவு 11.45 மணியளவில் நடந்த...

10 கோடி பெறுமதி குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கிரீன் சேனல் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த...

எல்ல பஸ் விபத்து – சாரதி கைது

நேற்று இரவு எல்ல-வெல்லவாய சாலையில் நடந்த பயங்கர விபத்து, வெல்லவாய நோக்கிச்...