– சர்வதேச நாணய நிதியம் கணிப்பு
2027ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி 3.7 சதவீதமாகக் குறையும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) கணித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் அண்மைய உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2025ஆம் ஆண்டில் 5.0 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், 2026ஆம் ஆண்டில் 4.0 சதவீதமாகவும், 2027ஆம் ஆண்டில் 3.7 சதவீதமாகவும் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2027ஆம் ஆண்டில் இலங்கையின் பணவீக்க விகிதம் 5.4 சதவீதமாகவும், வேலையின்மை விகிதம் 3.9 சதவீதமாகவும் இருக்கும் என IMF எதிர்பார்க்கிறது.
இலங்கையின் நடப்புக் கணக்கில் 2025ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.6 சதவீத உபரி பதிவாகியிருந்தது. எனினும், இந்த நிலை 2026ஆம் ஆண்டில் GDPயில் 0.5 சதவீத பற்றாக்குறையாகவும், 2027ஆம் ஆண்டில் 0.3 சதவீத பற்றாக்குறையாகவும் மாறும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதார வளர்ச்சி
உலகளாவிய பொருளாதாரம் 2026ஆம் ஆண்டில் 3.1 சதவீதத்தாலும், 2027ஆம் ஆண்டில் 3.4 சதவீதத்தாலும் வளர்ச்சியடையும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
அதேவேளை, உலகளாவிய அடிப்படைப் பணவீக்கம் 2026ஆம் ஆண்டில் 4.7 சதவீதமாக அதிகரித்து, 2027ஆம் ஆண்டில் 4.1 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழ்நிலைகள், அதன் காரணமாக எரிசக்தி உள்ளிட்ட பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்தல் மற்றும் சர்வதேச வர்த்தகத் தடைகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஆகியவை உலகளாவிய பணவீக்க நிலைமைக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாகவும் IMF சுட்டிக்காட்டியுள்ளத
