10 அமைச்சர்கள் உத்தியோகபூர்வ இல்லங்களில்

0
19

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் உத்தியோகபூர்வ இல்லங்களைப் பெற்றுக்கொள்ள மாட்டார்கள் என ஆரம்பத்தில் அறிவித்திருந்த போதிலும், தற்போது 10 அமைச்சர்கள் அமைச்சுக்களுக்குச் சொந்தமான உத்தியோகபூர்வ இல்லங்களில் வசித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சர், பொது நிர்வாக மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் இவ்வாறு உத்தியோகபூர்வ இல்லங்களில் வசித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மாதிவெல உத்தியோகபூர்வ இல்லங்களில் வசித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் உறுதியளித்த அரசியல் மாற்றம் எங்கே எனக் கேள்வி எழுப்பிய அவர், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மாற்றம் குறித்த அறிவிப்புகள் வெறும் பொய்யாகவே அமைந்துள்ளதாகவும் விமர்சித்தார்.

நேற்று (26) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here