ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவினருக்கு எதிராக நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இன்று (27) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இதன்படி, பிரதிவாதிகளுக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் அவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
