கொழும்பு LNW: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப ஒன்றியத்தினால் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (27) சீதுவை – ரத்தொலுவையில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நினைவுச் சின்னத்தின் முன்னால் நடைபெற்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுமாறு அரசாங்கத்தை நினைவூட்டுவதுடன், இவ்வாறான குற்றங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பதும் இந்த நினைவேந்தல் நிகழ்வின் நோக்கமாகும்.
இந்த நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.









படங்கள்: அஜித் செனவிரத்ன
