பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி விளக்கமறியலில்

0
34

வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்தமை மற்றும் அதன் குத்தகைத் தவணைக் கட்டணங்களை (Lease) செலுத்தியமைக்கான பணம் கிடைத்த விதம் குறித்துத் தெளிவுபடுத்தத் தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக, கொட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவு பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்ட இவர், நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இவரது மாதாந்த சம்பளம் 1,40,000 ரூபாயாக இருக்கும் நிலையில், காரின் மாதாந்த குத்தகைத் தவணை 1,32,000 ரூபாயாக உள்ளதாகவும், இவரது கணக்குகளுக்குப் பெருமளவு பணம் வந்துள்ளதாகவும் CID சுட்டிக்காட்டியுள்ளது.

இதையடுத்தே இவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், வெள்ளிக்கிழமை இது குறித்த விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் CID-க்குக் கட்டளையிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here