அடுத்த மாதம் முதல் அனைத்து பயிற்சிப் புத்தகங்களின் விலைகளும் 18 சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தேசிய புத்தக விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட பெறுமதி சேர் வரி (VAT) சலுகைகள் காரணமாக இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, அடுத்த மாதம் முதல் சந்தையில் விற்பனை செய்யப்படும் அனைத்து பயிற்சிப் புத்தகங்களின் விலைகளும் 18 சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளன.
