ஜனாதிபதி வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்திய மறுநாளே லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு

0
16

ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் விளக்கமளித்த மறுநாளே, நேற்று லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பினால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதாக சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியபோது, சபாநாயகரும் சபை முதல்வரும் அதற்கு இடையூறு ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளை ஹன்சார்ட் பதிவிலிருந்து நீக்குமாறு சபை முதல்வர், சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் கேள்வி எழுப்புவதற்கு வாய்ப்பளிக்கப்படாமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அதிருப்தியையும் வெளியிட்டார்.

நாட்டிலும் மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கருத்துகளை முன்வைப்பதற்கு வாய்ப்பளிக்கப்படாமை கவலைக்குரிய விடயம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here