ஜனாதிபதியின் தலைமை அதிகாரியாக அனுர திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்கு அனுர திஸாநாயக்க முழு அதிகாரங்களுடன் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அநுர திஸாநாயக்க இதற்கு முன்னர் பிரதமரின் செயலாளராக கடமையாற்றியதோடு, மஹிந்த ராஜபக்ஷவின் இராஜினாமாவின் பின்னர், அநுர திஸாநாயக்கவும் செயலாளர் பதவியில் இருந்து விலக நேரிட்டது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அநுர திஸாநாயக்க தனது செயலாளராக நியமிக்கத் தயாராக இருந்த போதிலும், குடும்ப உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, அந்த இலக்கை அடைய முடியவில்லை.
ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களின் அழுத்தத்தின் கீழ், பி.பி ஜயசுந்தர ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டதுடன், அவர் பதவி விலகியதன் பின்னர் தற்போதைய செயலாளர் காமினி செனரத் ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.