இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானும் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு தொடர்ச்சியான உதவிகளை வழங்கும் இந்தியாவிற்கு நன்றிகளை தெரிவிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொருளாதார நெருக்கடியை நிவர்த்திப்பதற்கு இலங்கைக்கு 07 வழிகளில் உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்து கடிதமொன்றையும் இந்திய மத்திய நிதியமைச்சரிடம் இவர்கள் கையளித்துள்ளனர்.
இவற்றில் உணவு, மருந்துகள், எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு முன்னுரிமையளிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர இலங்கையில் முதலீடு செய்ய இந்திய முதலீட்டாளர்களை ஊக்குவிக்குமாறும் குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.