ரணிலை சந்தித்த மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி சஜித்துடனும் சந்திப்பு

0
159

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் அவர்கள் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களை இன்று (21) எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின்போது இருதரப்பு அடிப்படையிலும் பல்வேறு முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக மாலைதீவிற்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் நட்புறவு பற்றியும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

அத்தோடு தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடி நிலைவரம் தொடர்பில் பேசப்பட்டதுடன் இலங்கையின் முன்நோக்கிய பயணத்திற்கு மாலைதீவினால் வழங்கப்படும் நட்பு ரீதியான ஆதரவிற்கு எதிர்க்கட்சித்தலைவர் அவரது நன்றியைத் தெரியப்படுத்தினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here