இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தேசிய அரசாங்கமொன்றில் நிதியமைச்சை பொறுப்பேற்க தயார் எனவும், அதற்கு தேவையான தியாகங்களையும் செய்ய தயார் எனவும் தெரிவித்தார்.
நாட்டின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமானத் தீர்வு காண்பதற்கு தேசிய அரசாங்கம் வேண்டும் என்பதை கட்சித் தலைவர்கள் தெரிவு செய்யாதது பிரச்சினைக்குரியது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நேரத்தில், சரியான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது. நாட்டின் மீது அன்பு இருந்தால் அதனை ஜனாதிபதி செய்ய வேண்டும் என்றார்.