நானி நடிப்பில் உருவான ‘ஷியாம் சிங்கா ராய்’ தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் கடந்த டிசம்பர் 24ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப்படம் தற்போது ஓடிடியில் சக்கை போடு போட்டு வருகிறது.
ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் தயாரிப்பாளர் வெங்கட் பொயனப்பள்ளி இந்தப்படத்தை தயாரித்துள்ளனர். இதுவரை வெளியான நானி படங்களிலேயே மிகவும் அதிக பொருட்செலவில் இந்தப்படம் வெளியாகியுள்ளது
சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வு, பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக கர்ஜிக்கும் படமாக இந்தப்படத்தைகொண்டாடுகின்றனர் ரசிகர்கள். தெலுங்கில் மசாலா படங்களை மட்டுமே பார்த்து ரசித்த தமிழ் ரசிகர்களுக்கு
'ஷியாம் சிங்கா ராய்' படம் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
மறுஜென்மம் கதையில் தேவதாசி முறை ஒழிப்பு, சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிரான கலகக்குரல் என பலவற்றை
திரைக்கதையாக்கியுள்ளனர். “எந்த பொண்ணும் யாருக்கும் தாசி கிடையாது. தனக்கு தாசி வேணும்னு நினைச்சா அது
கடவுளே கிடையாது. கடவுளோட போர்வையில இருக்கிறவங்க நடத்துற அயோக்கியத்தனம் இது. ஆத்மார்த்தத்தைவிட
எந்த ஆகமும் பெரிசு கிடையாது” போன்ற வசனங்கள் படம் முழுவதும் பார்வையாளனுக்குள் பலவித
கேள்விகளை எழுப்புகிறது.சாய் பல்லவியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதம் திரையரங்கில்
வெளியான படம் தற்போது ஓடிடி தளமான நெட் ஃபிளிக்ஸில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
'ஷியாம் சிங்கா ராய்' படம் நெட் ஃபிளிக்ஸில் அதிகமான பாரவையாளர்களால் பார்க்கப்பட்ட லிஸ்டில் உலகளவில்
மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இந்திய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இதனை நானி ரசிகர்கள்
கொண்டாடி வருகின்றனர்.
நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு துண்டு நிலத்தில் உரிமை இருக்க வேண்டும் எனவும், சில அரசியல் நயவஞ்சகர்கள் இதற்கு எதிராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்நாட்டில் பாடசாலை செல்லும்...
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை
மட்டக்களப்பு - அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும்
கொழும்பு - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காலி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்
கூடிய மழை பெய்யும் சாத்தியம்
யாழ்ப்பாணம் - அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும்
கண்டி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
நுவரெலியா - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
இரத்தினபுரி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
திருகோணமலை - அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும்
மன்னார் - பிரதானமாக சீரான வானிலை
(வளிமண்டலவியல் திணைக்களம்)
நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினர் விடுத்து வரும் கோரிக்கை தொடர்பில், எவ்விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பயணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
எனினும், இத்தருணத்தில் நாட்டை...
பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு சொந்தமான கணக்கிலிருந்து பாராளுமன்ற அலுவல்கள் செயலாளர் உதித் லொக்குபண்டார பணத்தை எடுத்த கதை இன்றும் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது கணக்கில் இருந்து...