சினிமா

காசில்லாமல் தவித்த சமந்தா, உதவி செய்த நாக சைதன்யா ஷாக்கான ரசிகர்கள்!

தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா.தற்போது இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா என...

பாடகி லதா மங்கேஷ்கர் பாடிய தமிழ் பாடல்கள்

இந்தியாவின் இசைக்குயில் என்று புகழப்பெற்ற பிரபல சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92. இந்தியாவின் ‘நைட்டிங்கேல்’ என்று புகழ்பெற்ற இசைக்குயில் லதா மங்கேஷ்கர் 36 மொழிகளில்,...

“பணத்துக்காக அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவசியம் இல்லை” -எச்சரித்த நடிகை

பிக்பாஸ் அல்டிமேட் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கி ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸில் ஏற்கனவே கலந்துகொண்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். பிக்பாஸ் அல்டிமேட்...

அடக்குமுறைகளுக்கு எதிரான போர்க்குரல் ‘ஷியாம் சிங்கா ராய்’!

நானி நடிப்பில் உருவான ‘ஷியாம் சிங்கா ராய்’ தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் கடந்த டிசம்பர் 24ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப்படம் தற்போது ஓடிடியில் சக்கை போடு போட்டு வருகிறது. ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் தயாரிப்பாளர் வெங்கட் பொயனப்பள்ளி இந்தப்படத்தை தயாரித்துள்ளனர். இதுவரை வெளியான நானி படங்களிலேயே மிகவும் அதிக பொருட்செலவில் இந்தப்படம் வெளியாகியுள்ளது சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வு, பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக கர்ஜிக்கும் படமாக இந்தப்படத்தைகொண்டாடுகின்றனர் ரசிகர்கள். தெலுங்கில் மசாலா படங்களை மட்டுமே பார்த்து ரசித்த தமிழ் ரசிகர்களுக்கு  'ஷியாம் சிங்கா ராய்' படம் ஆச்சரியத்தை அளித்துள்ளது. மறுஜென்மம் கதையில் தேவதாசி முறை ஒழிப்பு, சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிரான கலகக்குரல் என பலவற்றை  திரைக்கதையாக்கியுள்ளனர். “எந்த பொண்ணும் யாருக்கும் தாசி கிடையாது. தனக்கு தாசி வேணும்னு நினைச்சா அது     கடவுளே கிடையாது. கடவுளோட போர்வையில இருக்கிறவங்க நடத்துற அயோக்கியத்தனம் இது. ஆத்மார்த்தத்தைவிட  எந்த ஆகமும் பெரிசு கிடையாது” போன்ற வசனங்கள் படம் முழுவதும் பார்வையாளனுக்குள் பலவித       கேள்விகளை எழுப்புகிறது.சாய் பல்லவியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதம் திரையரங்கில்  வெளியான படம் தற்போது ஓடிடி தளமான நெட் ஃபிளிக்ஸில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. 'ஷியாம் சிங்கா ராய்' படம் நெட் ஃபிளிக்ஸில் அதிகமான பாரவையாளர்களால் பார்க்கப்பட்ட லிஸ்டில் உலகளவில்  மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இந்திய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இதனை நானி ரசிகர்கள்  கொண்டாடி வருகின்றனர். 

அனுமதியின்றி காட்டப்பட்ட மகளின் முகம் – கோலி மனைவி அனுஷ்கா முன் வைத்த வேண்டுகோள்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா ஜோடி நீண்ட நாட்கள் காதலித்து பின்னர் கடந்த 2017-ஆம் நாட்கள் தேதி இத்தாலியில் நெருங்கிய உறவினர்களுக்கு...

Popular

spot_imgspot_img