Tamil

இன்றைய வானிலை மக்களே அவதானம் !

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.  பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்   அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை மட்டக்களப்பு - அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும் கொழும்பு - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காலி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்  கூடிய மழை பெய்யும் சாத்தியம் யாழ்ப்பாணம் - அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும் கண்டி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நுவரெலியா - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் இரத்தினபுரி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் திருகோணமலை - அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும் மன்னார் - பிரதானமாக சீரான வானிலை (வளிமண்டலவியல் திணைக்களம்)

வைரஸ் தொற்று அதிகரிப்பதால் நாடு முடக்கப்படுமா

நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினர் விடுத்து வரும் கோரிக்கை தொடர்பில், எவ்விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பயணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். எனினும், இத்தருணத்தில் நாட்டை...

பிரதமர் மஹிந்தவின் கணக்கில் இருந்து பணம் திருடப்படுவது இது முதல் தடவை அல்ல

பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு சொந்தமான கணக்கிலிருந்து பாராளுமன்ற அலுவல்கள் செயலாளர் உதித் லொக்குபண்டார பணத்தை எடுத்த கதை இன்றும் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது கணக்கில் இருந்து...

விவசாயிகளுக்கு நட்டஈடு, பாராளுமன்றில் சட்டமூலம் கொண்டுவர வலியுறுத்தல்

உரத்தை தடை செய்து விவசாயிகளை பேரழிவில் ஆழ்த்திய அரசாங்கம்,குறித்த விவசாயிகள் சிரமப்பட்டு நெற்செய்கை மேற்கொண்டு அறுவடை செய்ய தயாராகும் போது,சீனா மற்றும் இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்...

13வது திருத்த சட்டம் யாருக்கு தேவை?

மிக அண்மையில் ஓர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காணோளியை பார்வையிட்டடேன். அதில் ஓரு பேச்சாளர், ‘யார் மக்களின் சமூக பொருளதார நலன்களில் அக்கறை கொண்டவர்களென்ற’வினாவை முன்வைத்து உரையாற்றினார். இவரின் உரையின் பிரகாரம், அரசியல்வாதிகள் என்பவர்கள்...

Popular

spot_imgspot_img