Tag: POLITICS

Browse our exclusive articles!

அநுராதபுரம் மொட்டு கட்சி கூட்டத்திற்கு வந்தவர்கள் அரசாங்கத்தின் எதிரிகள் – தேரர் வௌியிடும் அதிர்ச்சி தகவல்

அமைச்சர்கள் சிலர் பெயர் போட்டுக் கொள்ளும் நோக்கில் முன்னெடுக்கும் செயற்பாடுகளை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும் மொட்டுக் கட்சி ஆதரவாளருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். சுபீட்சத்திற்கான நோக்கு என்ற...

தமிழ் கட்சிகளின் மாநாடு, சமகாலத்தின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு-மனோ கணேசன்

ரெலோ கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற, நேற்றைய தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு, சமீப காலத்தில் நிகழ்ந்த ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு. இந்த தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் ஒருங்கிணைவு...

பாரதப் பிரதமிரிற்கான கடித வடிவம் மாற்றப்பட்டது

தமிழ்க் கட்சிகள் ஒண்றினைந்து பாரதப் பிரதமரிடம் முன் வைக்கவுள்ள கூட்டு அறிக்கையின் பொருள் முழுமையாக மாற்றப்பட்டுள்ளது.

மக்களிற்காக செயல்பட்டேன் காரைநகர் பிரதேச சபையின் முன்னணி உறுப்பினர் ப.தவமணி

கட்சியின் நலனிற்காக நடுநிலை வகிக்காது பிரதேச மக்களின் நலனிற்காக வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்தேன் என காரைநகர் பிரதேச சபையின் முன்னணி உறுப்பினர் பரமானந்தம் தவமணி தெரிவித்தார். காரைநகர் பிரதேச சபை வரவுசெலவு திட்டம் தோற்கடிப்பு செய்யப்பட்டதனால் நான் உட்பட இருவர் உடன் அமுலுக்கு வரும்வகையில் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்குவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் அறிவித்துள்ளார். நான் ஓர் காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் என்னிடம் என் பிரதேச விடயத்தை கேட்டறிய வேண்டும். அதை விடுத்து வெறுமனே கட்சி நலனிற்காக முடிவை எடுத்து அறிவித்தால் மக்கள் அதனை ஏற்க மாட்டார்கள். நான் மக்கள் நலனை கேட்டேன் அதன்படியே செயல்பட்டேன். காரைநகர் பிரதேச சபையின் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பது என்பதும் அந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதும் ஒரே விடயம். ஏனெனில் காரைநகர் பிரதேச சபையில் 11 உறுப்பினர்கள். எஞ்சிய 10 உறுப்பினர்களினது முடிவும் ஏற்கனவே வெளிப்பட்ட ஒன்று அதாவது கூட்டமைப்பு, சுயேட்சைக் குழு தலா 3 ஆசணங்களும், ஐ.தே.கட்சி மற்றும் ஈ.பீ.டீ.பி தலா 2 ஆசணங்களையும் கொண்டிருக்கும் நிலமையில் சுயேச்சைக் குழுவிற்கு ஈ.பீ.டீ.பியும் கூட்டமைப்பிற்கு ஐ.தே.கட்சி ஆதரவளிப்பதும் கடந்த 8 ஆம் திகதி வாக்கெடுப்பின்போதே வெளிப்பட்டது. .இதன் பின்பும் என்னை நடுநிலமையாக இருக்குமாறு கூறியதன் மூலம் ஈ.பீ.டீ.பியின் கூட்டு அணி வெற்றியீட்ட வேண்டும் என்ற கபட நோக்கம் கொண்டதாக எமது பிரதேச மக்கள் கருதினர் அதனால் எனக்கு அரசியல் எதிர் காலம் இல்லாவிட்டாலும் மக்களிற்கு அரசியல் எதர்காலம் வேண்டும் எனக் கருதி வாக்களித்தேன் என்றார்.

Popular

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சேவை முடக்கம்

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர...

Subscribe

spot_imgspot_img