நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், நிதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலி சப்ரி மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் 2022 ஏப்ரல் 12ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற மாநாட்டில் வைத்து நன்கொடையளிக்கும் நாடுகளுக்கு அறிவித்தனர்.
அடுத்த வாரம் இடம்பெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து இராஜதந்திர சமூகத்திற்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
இடைப்பட்ட காலத்தில் இணைப்பு நிதியுதவியை வழங்குமாறு நன்கொடையளிக்கும் நாடுகளுக்கு அமைச்சர்கள் அழைப்பு விடுத்தனர்.
பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர்கள், பரந்தளவிலான கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டனர்.
வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேவும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்தால் மீண்டும் அரசாங்கத்தில் இணையத் தயார் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரது தரப்பினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் செய்தியை...
புதிய அமைச்சரவையை நியமிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல புதியவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என்றும், அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும் என்றும் தகவல்கள்...
நாட்டில் தற்போது நிலவுகின்ற விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று முற்பகல் முக்கிய கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
அதன் முதற்கட்ட கலந்துரையாடலில் நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர்...
இன்று (16) காலை நிலவரப்படி சுமார் 10 பொலிஸ் லொறிகள் காலி முகத்திடல் மைதானத்திற்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தப்பட்டிருந்தன.
மக்கள் போராட்டத்தை கலைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக நாம் உள்ளிட்ட ஊடகங்கள் மற்றும் சமூக...