வடக்கில் ஒரே நாளில் நால்வர் உயிரிழப்பு

0
206

புதுவருட தினத்தில் வடக்கில் இடம்பெற்ற சம்பவங்களில் நால்வர்  உயிரிந்த அதேநேரம் மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டம்
புதுக்குடியிருப்பு வற்றாப்பளை வீதியில் கேப்பாபுலவுப் பகுதியில் டிப்பர் மோட்டார் சைக்கில்  விபத்தில் இருவர் உயிரிழந்ததோடு மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

இதன்போது சூரியகுமார் கரிகரன் வயது 17 மற்றும் கிருஸ்னசாமி மாரிமுத்து வயது 43 என்பவர்களே விபத்தின்போது பரிதாபகரமாக  உயிரிழந்த அதேநேரம் எஸ். தர்சன் என்னும் இளைஞன் படுகாயமடைந்தார்.

இதேநேரம் வவுனியா மாவட்டம் ஏ-9 வீதியில் தாண்டிக்குளம் பகுதியில் பிக்கப் வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதி ஏறபட்ட விபத்தில் 32 வயது முச்சக்கர வண்டிச் சாரதி உயிரிழந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேநேரம் கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் சந்திப் பகுதியில் இடம்பெற்ற வன்முறையில்
குணரட்னம் கார்த்தீபன்  என்னும் 28 வயதையுடை முல்லைவீதி பரந்தன் என்னும் முகவரியுடைய  இளைஞன் மீது  போத்தலினால் குத்தியதன் காரணமாக  உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இவரது உடல் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள அதே நேரம் மேலும. ஒருவர் கழுத்தில் வெட்டுக் காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here