நாட்டில் தற்போது கேஸ், பால் மா, மண்ணெண்ணெய் போன்றவை பெற வரிசையில் நிற்கும் சகாப்தம் உருவாகி இருப்பது இரகசியமல்ல.
அதன்படி, கேஸ், பால் மா, மண்ணெண்ணெய் வாங்க மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது.
இதனால் அர ஊழியர்களும், வரிசையில் காத்திருந்துடன் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அவ்வாறான அரச உத்தியோகத்தர் ஒருவர் அண்மையில் தனது நிறுவனத்தில் பால் மா மற்றும் எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருப்பதற்காக விடுமுறை கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த கோரிக்கை அடங்கிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.