அக்குரேகொட இரட்டை கொலை – மேலும் ஒரு சந்தேகநபர் கைது

0
157

அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கொண்டு சென்றுள்ளதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவர் கொட்டாவையில் வைத்து மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளில், ‘கரந்தெனிய சுத்தாவின் ஆலோசனையின் பேரில் டுபாய் நிபுண மற்றும் மல்வானை டுடூ (Tutu) ஆகியோரே இந்தக் கொலையை நெறிப்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், குறித்த சகோதரர்கள் இருவரும் அக்குரேகொடவில் அமைந்துள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றின் அருகில் காத்திருந்த துப்பாக்கிதாரிகளுக்குத் துப்பாக்கிகளை வழங்கும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காணொளிகள் தற்போது ஊடகங்களுக்கு வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here