அடுத்து வருவது வாழ்வா சாவா தேர்தல் – அநுர

Date:

நாட்டில் நடைபெறவுள்ள தேர்தல்கள், இலங்கை அரசியல் அரங்கில் இதுவரை இல்லாத வகையில் மிக உக்கிரமான போரை உருவாக்கும், இது தேசிய மக்கள் சக்திக்கு (NPP) வாழ்வா சாவா விளையாட்டாக இருக்கும் என அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், தற்போது உருவாகியுள்ள அரசியல் முகாம்களும், அரசியல் பிளவுகளும் சாதாரணமானவை அல்ல. இம்முறை அரசியல் போரில் NPP தோல்வியுற்றால், அது நாட்டையும் மக்களையும் மேலும் துயரத்திற்கு இட்டுச் செல்லும் என்றும் NPP இன் வெற்றி நாட்டை புதிய அபிலாஷைகளுடன் ஒரு பாதையில் வழிநடத்தும் என்றும் திஸாநாயக்க கூறினார்.

நீண்டகாலமாக அரசாங்கங்கள் கடைப்பிடித்து வரும் தோல்வியடைந்த பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளுக்கு எதிராக புதிய பொருளாதாரப் பயணத்தை உருவாக்கும் சித்தாந்தத்தை NPP விவாதிக்கும் அதே வேளையில் அரச சொத்துக்களை விற்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசாங்கம் திட்டங்களை வகுத்து வருவதாக அவர் கூறினார்.

சமூகக் குற்றங்களை எதிர்த்துப் போராடவும், ஊழல் நிறைந்த அரசியல் கலாச்சாரத்தை மாற்றவும், அதன் மூலம் நாட்டில் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கவும் திட்டங்களை வகுப்பது குறித்தும் NPP ஆலோசித்து வருவதாக அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...