‘மீள்குடியேற்றம்’ – ஜனாதிபதி யாழில் பிறப்பித்துள்ள அவசர உத்தரவு

0
141

2025ஆம் ஆண்டுக்குள் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் நிறைவுசெய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிரடி உத்திரவை பிறப்பித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மீள்குடியேற்றுவதில் தற்போதுள்ள பிரச்சினை தொடர முடியாது. இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்கான திட்டமொன்றை தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here