சதொசவிற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக்க ரத்னமலல நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் புதல்வரான ஜோஹான் பெர்ணான்டோ, சதொசவிற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
