ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையே நெருங்கிய எதிர்காலத்தில் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக மிக நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, எதிர்வரும் நாட்களில் கொழும்பில் ரகசியமாக இந்த சந்திப்பு நடைபெறும் என இரு தரப்புகளுக்கும் நெருக்கமான தகவல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
தற்போது வெளிநாட்டில் தங்கியிருக்கும் ரணில் விக்ரமசிங்க அவர்களின் தனிப்பட்ட சட்டத்தரணி, ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா மீண்டும் நாட்டிற்கு திரும்பிய பின்னர், இந்த சந்திப்பிற்கான இடம் மற்றும் நேரம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ரணில் – சஜித் சந்திப்பிற்கு முன்னதாக, இரு கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் சந்தித்து கலந்துரையாட உள்ளதாகவும், நம்பகமான தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
