யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலுக்குச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கடலில் மயங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய அமலசூரி அன்ரனியூட் என்ற 5 பெண் பிள்ளைகளின் தந்தையே சாவடைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மேற்படி நபர் உட்பட மூவர் நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணியளவில் கடற்றொழிலுக்குச் சென்றனர்.
இதன்போது அமலசூரி அன்ரனியூட் திடீரென மயக்கமடைந்துள்ளார். அவருடன் சென்றவர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் சேர்த்தனர்.
இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.