சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் ; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Date:

யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை ஒழுங்குபடுத்துவதற்காக சிங்கப்பூரில் தற்போது பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடகச் சட்டத்தைப் போன்ற சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப் பணிப்பாளர்களுடன் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று (06) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சில சமூக ஊடக செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் பின்பற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலான கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, இலங்கையில் பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு சட்டங்கள் இருந்தாலும், சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு அவ்வாறான சட்ட கட்டமைப்புகள் எதுவும் இல்லை என தெரிவித்தார்.

இதன் விளைவாக சிங்கப்பூரில் தற்போது நடைமுறையில் உள்ள தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடகச் சட்டத்தை தாம் கொண்டு வந்துள்ளதாகவும், அதனை ஆராய்ந்து எதிர்காலத்தில் இலங்கைக்கு ஏற்ற சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

MV X-Press Pearl விபத்துக்கு இழப்பீடு வழங்க சிங்கப்பூர் ஏன் மறுக்கிறது?

மே–ஜூன் 2021 இல் ஏற்பட்ட MV X-Press Pearl விபத்து, இலங்கை...

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...