அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குவது தொடர்பில் இன்று (06) விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. தொழில் திணைக்களத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
நாட்டிலுள்ள அனைத்து மக்களும் பொருளாதார ரீதியில் பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ள நிலையில், அரச ஊழியர்களுக்கு மாத்திரம் இந்த கொடுப்பனவை வழங்குவது நீதியற்ற செயற்பாடு என்பதால், தனியார் துறை ஊழியர்கள் அனைவருக்கும் 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவதில் தலையீடு செய்யுமாறு தேசிய ஊழியர் சங்கத்தின் சுரங்க நாவுலகே கோரிக்கை விடுத்துள்ளார்.
தொழில் அமைச்சரிடம் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதனிடையே, தோட்டத்தொழிலாளர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவை அவர்களது நாளாந்த சம்பளத்துடன் இணைத்து வழங்குமாறு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தொழில் அமைச்சர் நிமல் ஶ்ரீபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பல தொழிற்சங்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.