ஜனாதிபதி நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதனை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைகளை மேற்கொண்டு அதன் முன்னேற்றத்தை எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காதிலக்க உத்தரவிட்டார்.
இதேவேளை, விசாரணைகளுக்கு அவசியமானால் நீதிமன்றத்திடம் மேலதிக உத்தரவுகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும் நீதவான் அறிவித்துள்ளார்.