சீன சுங்க அதிகார சபையின் தலையீட்டின் ஊடாக இலங்கையில் இருந்து சீனாவிற்கு கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட அமைச்சரவைப் பேச்சாளர் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ முன்மொழிந்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதன்படி, அதைச் செயல்படுத்தும் வகையில், ஆய்வு, தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதாரத் தேவைகள் தொடர்பான நடைமுறைகளை உள்ளடக்கிய ஒப்பந்தத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திட முன்மொழியப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.