ஐ.தே.கவுடன் சேர்வதா? இல்லையா? – ‘மொட்டு’க்குள் இரு நிலைப்பாடுகள்

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிடுவதா இல்லை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது பற்றி அந்தக் கட்சிக்குள் இரண்டு நிலைப்பாடுகள் நிலவுகின்றன.

பஸில் ராஜபக்ச உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் தனித்துப் போட்டியிடும் நிலைப்பாட்டில் உள்ளனர் எனவும், வேறு சிலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர் எனவும் தென்னிலங்கை வாராந்தப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

யானைக் கட்சியோ மொட்டுக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுவதற்குத் தயாராக இருக்கின்றது.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களைப் பல தடவைகள் சந்தித்து களநிலவரம் பற்றி பஸில் ஆராய்ந்தார். அப்போது அதிகமானவர்கள் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றே கூறினார்கள். கிராம மட்டத்தில் யானைக்குச் செல்வாக்கு இல்லை என்றும் அவர்களுடன் சேர்ந்து போட்டியிட்டால் தோல்வியடைந்து விடுவோம் என்றும் அவர்கள் கூறினர்.

ஒருவேளை இணைந்து போட்டியிட்டால் மொட்டுச் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என அவர்கள் கூறி இருந்தனர். இதனைத் தொடர்ந்தே தனித்துப் போட்டியிடுதல் என்ற நிலைப்பாட்டைப் பஸில் எடுத்துள்ளார் என்று அறியமுடிகின்றது.

இருந்தும், இது தொடர்பில் இரண்டு கட்சிகளும் பேசி இறுதி முடிவு எட்டப்படும் என மொட்டுக் கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது – என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திருமலை சம்பவத்துக்கு திருமா கண்டனம்!

கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? சிங்கள...

நடக்கவே முடியாத வயதிலும் களத்துக்கு வருகிறார் மஹிந்த!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் எதிர்வரும் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள்...

இந்திய ஜார்கண்ட் மாநில மாநாட்டில் இதொகா தலைவர், ஶ்ரீதரன் எம்பி பங்கேற்பு

இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் இதொகா...

தங்காலையில் இருவர் சுட்டுக் கொலை

தங்காலை, உனகுருவாவில் உள்ள கபுஹேன சந்திப்பில் நேற்று மாலை 6.55 மணியளவில்...