ஐ.தே.கவுடன் சேர்வதா? இல்லையா? – ‘மொட்டு’க்குள் இரு நிலைப்பாடுகள்

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிடுவதா இல்லை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது பற்றி அந்தக் கட்சிக்குள் இரண்டு நிலைப்பாடுகள் நிலவுகின்றன.

பஸில் ராஜபக்ச உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் தனித்துப் போட்டியிடும் நிலைப்பாட்டில் உள்ளனர் எனவும், வேறு சிலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர் எனவும் தென்னிலங்கை வாராந்தப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

யானைக் கட்சியோ மொட்டுக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுவதற்குத் தயாராக இருக்கின்றது.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களைப் பல தடவைகள் சந்தித்து களநிலவரம் பற்றி பஸில் ஆராய்ந்தார். அப்போது அதிகமானவர்கள் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றே கூறினார்கள். கிராம மட்டத்தில் யானைக்குச் செல்வாக்கு இல்லை என்றும் அவர்களுடன் சேர்ந்து போட்டியிட்டால் தோல்வியடைந்து விடுவோம் என்றும் அவர்கள் கூறினர்.

ஒருவேளை இணைந்து போட்டியிட்டால் மொட்டுச் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என அவர்கள் கூறி இருந்தனர். இதனைத் தொடர்ந்தே தனித்துப் போட்டியிடுதல் என்ற நிலைப்பாட்டைப் பஸில் எடுத்துள்ளார் என்று அறியமுடிகின்றது.

இருந்தும், இது தொடர்பில் இரண்டு கட்சிகளும் பேசி இறுதி முடிவு எட்டப்படும் என மொட்டுக் கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது – என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சில பகுதிகளில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

நாட்டில் இனி வேறு ஆட்சி மலராது

இனி இலங்கையில் வேறு அரசுகள் உருவாகாது என்றும், தொடர்ந்து ஜாதிக ஜன...

நிதி அமைச்சின் உதவி இயக்குநர் தற்கொலை

இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் (ERD) உதவி இயக்குநராகப்...

இலங்கையின் கடன் சுமை பாரிய அளவில் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1...