தென் மாகாணத்திலுள்ள வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் இரு வெளிநாட்டவர்கள் உட்பட 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு வெளிநாட்டவர்கள் பல்கேரிய பிரஜைகள் மற்றும் அவர்களில் ஒருவர் கனடாவின் குடியுரிமை பெற்றவர்.
கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி, மேகத்தண்ணா போலீஸ் நிலைய ஓஐசி ஆவார்.கொழும்பில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த இரு வெளிநாட்டவர்களும், பிடிகல, அமுகொட பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.