தமிழகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்திய போதை பொருள் சிக்கியது

Date:

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதை பொருள் கடத்திய 26 கோடி பெறுமதியான போதைப்பொருள் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது.

கடல் வழியாக போதை பொருள் கடத்துவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய இலங்கை கடற்கரை பகுதிகளில் போதை பொருள் தடுப்பு பொலிஸார் மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது புத்தளம் கடற்கரையில் இருந்து புறப்பட்ட ஒரு ஆட்டோவை பொலிஸார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். ஆட்டோவில் வைக்கப்பட்டி ருந்த பெட்டி, பைகளில் ஐஸ் பெட்டிகள் இருந்தன. அவைகளை சோதனை செய்த போது ஐஸ் போதை பொருள் என்பது தெரிய வந்தது.

போதைப் பொருள் கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அதில் ஒருவர் பிரபல போதை பொருள் கடத்தல் காரர் என்று போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ ஐஸ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.

இந்த போதைப் பொருள், தமிழகத்தின் வேதாரண்யத்தில் இருந்து பைபர் படகில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. நடுக்கடலில் இலங்கையைச் சேர்ந்த படகுக்கு போதைப் பொருள் மாற்றம் செய்யப்பட்டு அங்கிருந்து இலங்கையின் கல்பட்டி பகுதிக்கு கடத்தி வந்துள்ளனர். பின்னர் படகில் இருந்து ஐஸ் போதை பொருளை ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர் என்பது தெரிய வந்தது.

போதைப் பொருள் கடத்தலில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்றும், வேதாரண்யத்தில் இருந்து கடத்தி யது யார்? ஆகியவை குறித்து விசாரணை நடக்கிறது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...

டிஜிட்டல் சேவைகள் 18% பெறுமதி சேர் வரிக்கு சஜித் எதிர்ப்பு

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18%...