மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் திடீர் சோதனை

Date:

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி,குஞ்சுக்குளம் பிரதான சோதனைச் சாவடியில் நேற்று (09) மாலை போதைப்பொருள் தொடர்பான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபால ஹேரத் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகே தலைமையில் மடு பொலிஸ் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் சோதனைச் சாவடியில் குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசன்ன சில்வா தலைமையில் மடு பொலிஸ் நிலைய பொலிஸார் இணைந்து குறித்த போதைப்பொருள் தொடர்பான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன் போது மன்னாரில் இருந்து சென்ற வாகனங்கள், மற்றும் பரய நாளன் குளம் வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த சகல வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

வாகனங்களில் பயணித்த மக்களுக்கு போதைப் பொருள் பரிசோதனை குறித்து அறிவித்தல்கள் வழங்கப் பட்டதன் பின்னர் சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்தனர்.

மேலும் மோப்ப நாயின் உதவியுடன் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.எனினும் திடீர் நடவடிக்கைகளினால் குறித்த வீதியூடாக பயணித்த மக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று (14) ஆம் திகதி தினசரி...

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...