நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல்

0
163

04 ஆவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை உறவுகளின் 50வது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாகவுள்ள நினைவிடத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்றது.

மதத்தலைவர்களாகிய வேலன் சுவாமிகள், மறவன் புலவு சச்சிதானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு முதன்மையான பிரதான சுடரினை ஏற்றினர். பின் மலர்மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினர்.

இவ் நினைவேந்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய சுரேஷ்பிரேமசந்திரன், மாகாணசபை உறுப்பினர்களாகிய கஜதீபன், சர்வேஸ்வரன், விந்தன் கனகரட்ணம், யாழ்ப்பாண மாநகர சபை முன்னாள் முதல்வராகிய இமானுவேல் ஆனனோல்ட், வி.மணிவண்ணன், மாநகரசபை முன்னாள் உறுப்பினர்கள், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here