காலநிலையில் மாற்றம்

Date:

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். 

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். 

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம்,  பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது

சொக்கா மல்லி என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

புதிய அமைச்சர்!

எரிசக்தி அமைச்சராக கலாநிதி அருண கருணாதிலக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...

நிலக்கரி மோசடி பொய்! எதிர்கட்சிக்கு தோல்வி

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் எந்தவிதமான நிலக்கரி மோசடியும்...

JVPயின் முழுநேர தொண்டர்கள் ராஜிதவிடம் புலம்பல்

தற்போதைய அரசாங்கத்தின் முன்னணி அமைச்சர்கள் குறித்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன...