முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார்

0
10

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று (14) இரவு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இறக்கும் போது அவருக்கு 69 வயதாகும்.

2001 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன், 2013ஆம் ஆண்டு நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

தற்போது அவர் பருத்தித்துறை – வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.

எம்.கே. சிவாஜிலிங்கம் தனது அரசியல் பயணத்தை தமிழீழ விடுதலைக் கழகம் (TELO) ஊடாக ஆரம்பித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here