ரணிலுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் CID விசாரணை

0
25

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிகிச்சையளித்து மருத்துவ சான்றிதழ்களை வழங்கிய மருத்துவர்களிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, சம்பந்தப்பட்ட ஐந்து மருத்துவர்களிடமிருந்தும் இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி பதவியில் இருந்த காலத்தில், 2023 ஆம் ஆண்டு மேற்கொண்ட லண்டன் பயணத்தின் போது அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், 2022 ஆகஸ்ட் 22 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார். அதே நாளின் இரவில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அப்போது அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மறுநாள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். சில நாட்கள் அங்கு சிகிச்சை பெற்ற பின்னர், அவரது உடல்நல நிலைமை தொடர்பான விடயங்களை நீதிமன்றம் கவனத்தில் எடுத்ததை அடுத்து, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here