மாத்தறையில் துப்பாக்கிச்சூடு

Date:

மாத்தறை – தெவினுவர, தல்பாவில பகுதியில் உள்ள கருவாடு வர்த்தகர் ஒருவரின் வீட்டின் முன்னால் அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு நேற்று (12) மாலை 4.45 மணியளவில் நடந்ததாகவும், இந்த துப்பாக்கிச் சூட்டால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.

கருவாடை வாங்க விரும்புவதாகக் கூறிய நிலையில, வாயில் காதவை திறந்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது வாயிலுக்கு அருகிலுள்ள சுவரில் துப்பாக்கிச் சூடு பாய்ந்ததுடன், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் காலியான தோட்ட உறையையும் எடுத்துச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அருகிலிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் பிரவேசித்த மோட்டார் சைக்கிள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சஜித் – ரணில் இடையே ரகசிய சந்திப்பு?

எதிர்காலத்தில் சமகி ஜன பலவேகய (SJB) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி...

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அமைச்சர் கருத்து

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்குமாயின்,...

சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியானது

2025 க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk...

ICC தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு

சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக,...