கொழும்பு மகசின் சிறையில் கைதிகள் இடையே மோதல்; இருவர் காயம்

0
20

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் நேற்று பிற்பகல் கைதிகள் சிலருக்கு இடையே தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வன்முறைச் சம்பவத்தில் ஐந்து பேர் தொடர்புடையதாகக் கூறப்படுவதுடன், அவர்களில் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக அவசரமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதலுக்கான துல்லியமான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here