நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்தத் தவறியதாகக் குற்றம்சாட்டி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள், கைதிகள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சர் தனது பொறுப்பை முறையாக நிறைவேற்றத் தவறியதாக எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று குறித்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நாடாளுமன்றத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் அரசின் பொறுப்புக்கூறல் மற்றும் நிர்வாகப் பொறுப்பு தொடர்பாக எதிர்க்கட்சி தீவிர விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
