‘ஹெலிகாப்டர்’ கூட்டணியில் இருந்து விலகுகிறது சு.க

0
104

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘சுதந்திர மக்கள் கூட்டமைப்பிலிருந்து’ விலகத் தீர்மானித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்றத்தில் உள்ள சுயேட்சை எம்பிக்கள் குழுவுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியது.

‘ஹெலிகொப்டர்’ சின்னத்தில் உருவாக்கப்பட்ட ‘சுதந்திர மக்கள் கூட்டமைப்பு’ கடந்த வாரம் கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும், புதிய கூட்டணியில் இருந்து விலகி, தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு இன்று தீர்மானித்துள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் SLFP யின் ‘கை’ சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்தல் விடுத்துள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here