Monday, December 23, 2024

Latest Posts

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா : முன்னாயத்தப் பணி ஆய்வுக்காக அதிகாரிகள் விஜயம்

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான முன்னாயத்த பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்கான கச்சதீவு நோக்கிய விஜயமொன்று நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (16) முன்னெடுக்கப்பட்டது.

இப்பயணத்தில் நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி பத்திநாதன் அடிகளார், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), நெடுந்தீவு பிரதேச செயலர் எப்.சி. சத்தியசோதி, யாழ்ப்பாண மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மற்றும் கடற்படை உயரதிகாரிகள் இணைந்திருந்தனர்.

குறிகாட்டுவான் துறைமுகத்தில் இருந்து கடற்படை படகு மூலம் கச்சதீவு சென்ற இக்குழுவினர், அங்கு திருவிழாவுக்கு வரும் பக்தர்களது தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மேற்கொள்ளவுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.