யாழ். மேயர் வேட்பாளராக மீண்டும் ஆனோல்ட் – தமிழரசுக் கட்சி தீர்மானம்!

0
240

யாழ்ப்பாணம் மாநகர சபையில் நாளை நடைபெறவுள்ள மேயர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக இம்மானுவேல் ஆனோல்ட்டைக் களமிறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.

யாழ். மாநகர மேயரைத் தெரிவு செய்வதற்கான தெரிவு நாளை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக நேற்று நடைபெற்ற கூட்டம் இணக்கமின்றி முடிவுக்கு வந்தநிலையில் –  இன்று காலை 9 மணிக்கு மீண்டும் கூட்டத்தைக் கூட்டி மேயர் தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

யாழ். மாநகர மேயர் வேட்பாளரைத் தெரிவு செய்வதில் தமிழரசுக் கட்சிக்குள் வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில், முன்னாள் மேயர் இம்மானுவேல் ஆனோல்ட் ஆகியோரின் பெயர்கள் மேயர் தெரிவுக்கு முன்வைக்கப்பட்ட நிலையில் இம்மானுவேல் ஆனோல்ட்டை மேயர் தெரிவுக்கு நிறுத்த தீர்மானிக்கப்பட்டது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here