தேர்தலில் போட்டியிட உள்ள பெண் வெட்டிக் கொலை

Date:

மினுவாங்கொட பிரதேசத்தில் பெண்ணொருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவரது வீட்டிற்கும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மினுவாங்கொடை, யாகொடமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார்.

அவர் வெட்டிக் கொல்லப்பட்டதாகவும், அவரது வீட்டை எரித்துவிட்டு கொலையாளிகள் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆதிவாசி தலைவர் உயிரிழப்பு

மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரத்கல பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல...

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...

வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த...