யாழ்., அராலி மத்தி பகுதியைச் சேர்ந்த ஒருவரின் நெஞ்சில் தேங்காய் வீழ்ந்தததால் உயிரிழந்துள்ளார்.
சிவானந்தன் கஜாணன் (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சாரதியாகப் பணிபுரியும் அவர் தென்னை மரத்தின் கீழ் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது நெஞ்சுப் பகுதி மீது தேங்காய் ஒன்று விழுந்தது.
அவரைக் குடும்பத்தினர் மருத்துவமனைக்குக் கொன்டு செல்லும் போது இடைவெளியில் உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
N.S